இதை செய்தால் எளிய முறையில் காரில் பெட்ரோலை சேமிக்கலாம்!
முடிந்தவரை சைக்கிளில் செல்வது, நடப்பது போன்றவற்றை செய்வதால் உடல் நலமும், சுற்றுசூழலுக்கு மேம்படுவதோடு எரிபொருள் செலவும் இருக்காது. பெரிய கார்களை பயன்படுத்தாமல் சிறிய ரக கார்களை பயன்படுவதால் மூலம் எரிபொருள் செலவை சேமிக்கலாம்.
அடிக்கடி பிரேக் போடாமல் சீராக வாகனம் ஓட்டுவது போக்குவரத்தை சிக்கலை குறைப்பதோடு எரிபொருள் கட்டணத்தையும் சேமிக்க வழிவகுக்கிறது. அடிக்கடி பிரேக் போடுவதால் ஏற்படும் விசையினால் எரிபொருள் வீணாகும்.
உங்கள் வாகனத்தின் இன்ஜினுக்கு போதுமான அளவு ஓய்வை கொடுக்க வேண்டும், தேவையில்லாமல் இன்ஜின் இயக்கத்தில் இருப்பதால் அதிகளவு எரிபொருள் வீணாக நேரிடும்.
வாகனங்களில் உள்ள ஏர் கண்டிஷனர் 4 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை எரிபொருளை கூடுதலாக பயன்படுத்துகிறது. அதனால் ஏர் கண்டிஷனர் நிறுத்தி வைத்துவிட்டு, காரின் ஜன்னலை திறந்துவைத்து இயற்கையான காற்றை சுவாசியுங்கள்.
ஏரோடைனமிக் திறன் கொண்ட வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் 2 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை எரிபொருளை சேமிக்கலாம்.