ஒல்லியான உடல் வாகை பெற... கோதுமைக்கு பதிலாக ‘இந்த’ தானியங்களுக்கு மாறுங்க!

Tue, 31 Oct 2023-11:38 pm,

கோதுமை சாப்பாத்திக்கு பதிலாக, இங்கே கொடுக்கப்பட்டுள்ள சிறந்த 5 தானியங்களை கொண்டு சப்பாத்தி தயாரித்து, அதனை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், உங்கள் எடையை விரைவாகக் குறைக்கலாம். ஏனெனில், அரிசி கோதுமையுடன் ஒப்பிடுகையில், இதில் எண்ணற்ற ஊட்டசத்துக்களும், எடையை குறைக்க தேவையான புரதமும் உள்ளது. இதனால் அதிகம் கலோரி எரிக்கப்படுகிறது.

கேழ்வரகு அல்லது ராகியில் புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ராகி மாவில் பசையம் இல்லை. ராகி மாவில் நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். ராகியின் புரத அளவை அரிசியுடன் ஒப்பிடுகையில், ராகியின் புரத அளவானது அரிசியை விட இரு மடங்காக உள்ளது.

முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடுகளை தடுக்கும் திறன் கொண்ட தினை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற மேலும் பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.  தினை பசையம் இல்லாத நார்ச்சத்து நிறைந்த தானியமாகும். சாப்பிட்ட பிறகு, உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பியதாக உணர்கிறது.

பார்லியில் செலினியம், தாமிரம், டிரிப்டோபன், மாங்கனீஸ், சோடியம் போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும், இதில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுகிறது. இது உங்களை நீண்ட நேரம் பசியாக உணராமல் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கண்டிப்பாக பார்லி ரொட்டியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் பார்லியில் மிகக் குறைந்த கலோரிகள் உள்ளன.

 

குயினோவா மாவு ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் என்றால் மிகையில்லை. அரிசி மற்றும் கோதுமை மாவைப் போலவே, குயினோவா மாவும் மெதுவாக பிரபலமடைந்து வருகிறது. குயினோவா மாவு பசையம் இல்லாதது. புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்றவை இதில் ஏராளமாக உள்ளன. இது அதிக அளவிலான கலோரிகளை எரிக்க உதவுகிறது.  இந்த மாவு நம் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது.  இதனால் பசி குறைகிறது. இதனால் நமது எடையை குறைக்க உதவுகிறது.

கோதுமைக்கு பதிலாக புரதங்கள் நிறைந்த  சோளம் ஒரு ஆரோக்கியமான தானிய விருப்பமாகும். சோளத்தில் இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனுடன், சோளம் ஒரு பசையம் இல்லாத தானியமாகும். இது நமது எடையைக் குறைக்க உதவுகிறது.

பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link