ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளுக்கு இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
ஆரஞ்சு, கிவி, திராட்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். இது ஈறுகளின் வீக்கத்தையும் குறைக்கிறது.
பால், பாலாடைக்கட்டி, மற்றும் வெண்ணெய் போன்ற பால் பொருட்களில் வைட்டமின் K2 நிறைந்துள்ளது, இது ஆரோக்கியமான பற்களை பராமரிக்க உதவுகிறது. இது தவிர, அவற்றில் ஏராளமான கால்சியம் உள்ளது, இது பற்களை வலுப்படுத்த உதவும்.
நட்ஸ் மற்றும் விதைகள் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன, அவை பாக்டீரியாக்களிலிருந்து பற்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றன.
உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க, பச்சை இலை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன, இது பற்களை வலுப்படுத்த உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.