Health Tips: LDL கொலஸ்டிராலை எரிக்கும் ‘சில’ உணவுகள்!
கெட்ட கொலஸ்ட்ராலை எரிப்பதில் ஆப்பிள்கள், பெர்ரி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் சிறந்தவை என்கின்றனர் நிபுணர்கள். இவற்றை தினமும் உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் எளிதில் கட்டுப்படும். எனவே, உடல் எடை அதிகரிப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சில குறிப்பிட்ட காய்கறிகள் மற்றும் பிற சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த பச்சை நிறை காய்கறிகளை, குறிப்பாக கீரையை அதிகம் உட்கொள்ள வேண்டும். பச்சை நிற காய்கறிகளில் இரும்புச் சத்து நிறைந்திருக்கும். இது இதயத்ட்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, தமனிகள் ஏற்படும் அடைப்பில் இருந்து காக்கிறது.
அதே போன்று மஞ்சள் உடலுக்கு மிகவும் நல்லது. இது பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இரவில் படுக்கும் முன் மஞ்சள் கலந்த பாலைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொலஸ்ட்ரால் எளிதில் கரைந்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
பூண்டில் உடலுக்கு உற்சாகம் அளிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. இவற்றை உட்கொள்வதால் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகள் எளிதில் குறையும். மாரடைப்பு, நீரிழிவு போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது. இவற்றை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
நட்ஸ் வகைகளிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாகக் கொண்டது வால்நட் என்னும் வாதுமை பருப்பு தான். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நம்முடைய உடலின் டிரை கிளிசரைடுகளை அதிகரிக்கச் செய்து கெட்ட கொலஸ்டிராலின் உற்பத்தியைத் தடுக்கிறது. கடல் உணவுகளில் உள்ள அதே அளவு கொழுப்பு அமிலங்கள் வாதுமை பருப்பில் நிறைந்திருப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.