மன அழுத்தம் முதல் இதய நோய் வரை... காலையில் புல் தரையில் வெறுங்காலுடன் நடங்க..!!
நகர வாழ்க்கையில், வெறும் காலுடன் நடப்பது சாத்தியமில்லை என்றாலும், தற்போது புல்தரையில் நடப்பதால் ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டு, பார்க்குகளில் வெறும் காலில் நடப்பதால், மன அழுத்தம் முதல் இதய நோய்களை தடுப்பது என பல வகைகளிலும் வியக்கத்தக்க பலன்களை கொடுக்கும்
இயற்கையோடு ஒன்றிணைந்த வகையில், புல் தரையில் கால்கள் பதிய நடப்பது, உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் புத்துணர்ச்சியை தரும். புல் தரையில் நடப்பதால் எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, மனம் மகிழ்ச்சி அடையும்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம், புல் தரையில் வெறும் காலுடன் நடப்பதால், உடலில் உள்ள வீக்கங்கள் குறைகிறது என்றும், இதயம் தொடர்பான நோய்கள், டைப் 2 நீரிழிவு வகை, சில புற்றுநோய் வகைகள் போன்றவை வராமல் தடுக்கப்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது.
ஜில்லென்று இருக்கும் ஈரமான புல்லில் கால் வைத்து நடக்கும் போது, பூமியுடன் கால்கள் நேரடி தொடர்பு கொள்வதால், அது கால்களுக்கு மசாஜ் செய்வது போல் ஆகிறது. தசைகள் தளர்வு பெற்று, வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
புல்வளியில் வெறும் காலுடன் நடப்பதால், நரம்புகள் தூண்டப்பட்டு, உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து, உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. இதனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.
புல்வெளியில் வெறும் காலுடன் நடப்பது தூக்கமின்மை பிரச்சனைக்கு மருந்தாக அமைகிறது. பூமியில் உள்ள எலக்ட்ரான்கள் நம் உடலில் பாய்ந்து, தூக்க நேரத்தை சீர்படுத்த உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.