இந்த காரணங்களுக்காக தான் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் டி20 அணியில் இல்லையா?
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்தியாவின் 16 பேர் கொண்ட அணியில் இருந்து இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நீக்கப்பட்டது ஆர்ச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இஷான் கிஷான் தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய போது, ஷ்ரேயாஸ் ஐயர் அதே தொடரில் ஒரு மோசமான பார்மில் இருந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரில் மொத்தமாக 41 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய இஷான் கிஷன் துபாயில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியுடன் பார்ட்டியில் காணப்பட்டார், இது தேர்வாளர்கள் மத்தியில் கோபத்தை ஈர்த்தது. டெஸ்ட் தொடரில் இருந்து இஷான் கிசான் விலகியதால் அவரை ஆப்கானிஸ்தான் டி20 அணியில் தேர்வுக்குழு எடுக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் மோசமான பேட்டிங் ஷ்ரேயாஸ் ஐயரின் குறைவான ரன்களுக்கு காரணம். இதனால் தேர்வுக்குழு அவரை மீண்டும் ஃபார்ம் மற்றும் உடற்தகுதி பெற ரஞ்சி டிராபியில் மும்பைக்காக விளையாட பரிந்துரைத்தனர். ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கும் ஆந்திரப் பிரதேசத்திற்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் அவர் விளையாடவுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபார்ம் பெறுவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். இஷான் மற்றும் ஸ்ரேயாஸ் டி20 அணியில் இடம் பெறாத நிலையில், ரின்கு சிங் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் அணியில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளனர்.