IND vs BAN: டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் மற்றும் ரோஹித்தின் தெறிக்கிவிடும் சாதனைகள்!
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன், இந்த அணிக்கு எதிரான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் டெஸ்ட் ரெக்கார்டுகளை பற்றி பார்ப்போம்.
விராட் கோலியின் சாதனை
வங்கதேசத்துக்கு எதிராக விராட் கோலி சிறப்பான சாதனை வைத்துள்ளார். 6 டெஸ்ட் போட்டிகளில் 54.63 சராசரியில் 437 ரன்கள் அடித்துள்ளார். இதில் 204 ரன்கள் உட்பட 2 சதங்களை அடித்துள்ளார்.
ரோஹித் சர்மாவின் சாதனை
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா 3 டெஸ்ட் போட்டிகளில் 11 சராசரியில் 33 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 21 ரன்கள் தான்.
இந்தியா vs பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர்
இந்தியா vs பங்களாதேஷ் அணிகள் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இந்தியா 11ல் வெற்றி பெற்று, 2 டிராவில் முடிந்தது. இந்தியாவை பங்களாதேஷ் அணி டெஸ்ட் வென்றதில்லை.
வலுவாக இருக்கும் வங்கதேசம்
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சென்று அங்கு அவர்களை 2-0 என்ற கணக்கில் க்ளீன் ஸ்வீப் செய்து வெற்றி பெற்றுள்ளது வங்கதேச அணி. இதனால் இந்தியா மற்றும் பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.