IND vs ENG: தனக்கான சொர்கத்தை சென்னை மைதானத்தில் உருவாக்கிய ஜோ ரூட்

Wed, 10 Feb 2021-8:14 pm,

218 என்ற ரன்களை எடுத்த ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 17 போட்டிகளில் 1,679 ரன்களை எடுத்துள்ளார். தனது ஐந்தாவது இரட்டை சதத்தை சென்னையில் பதிவு செய்த பேட்ஸ்மேன் இப்போது இந்தியாவுக்கு எதிராக சராசரியாக 62.19 என்ற ரன் ரேட்டை வைத்துள்ளார்.  (Image: England Cricket)

இந்தியாவில் விளையாடிய 7 போட்டிகளில் 842 ரன்கள் குவித்துள்ளார். இந்தியாவிற்கு 2012 இல் வந்து போட்டியில் களம் இறங்கிய ஜோ ரூட்டுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது.  (Image: England Cricket)

ரூட் இந்தியாவில் பேட்டிங் செய்ய களம் இறங்கினால், அவரது சராசரி அதிகரிக்கிறது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் 218 மற்றும் 40 ரன்கள் எடுத்த ரூட், ஏழு போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 800க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார்   (Image: England Cricket)

இதற்கு முன்பு இந்தியாவில் விளையாடிய ஜோ ரூட், மொஹாலி, ராஜ்கோட், விசாக், மும்பை மற்றும் நாக்பூரில் விளையாடியுள்ளார், இரட்டை சதம் எடுப்பதற்குக் முன்பு அவர் 78, 93, 128, 93 மற்றும் 98 என்ற அருமையான ஸ்கோர்களை பதிவு செய்துள்ளார்.    (Image: England Cricket)

20 சதங்கள் மற்றும் 49 அரைசதங்களுடன், ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் 8500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். சர் அலெஸ்டர் குக் (Sir Alastair Cook) மற்றும் கிரஹாம் கூச் (Graham Gooch) ஆகியோருக்குப் பின்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்திற்கான அதிக ரன்களின் பட்டியலில் ரூட் இப்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். குக் 12,472 ரன்களுடன் முன்னிலை வகிக்கிறார், கூச் 8900 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

(Image: England Cricket)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link