இன்னும் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதா?
அமெரிக்காவிற்கு எதிரான குரூப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது. இதனால் இன்று இந்தியாவிற்கு எதிரான போட்டியில் கட்டாய வெற்றி தேவை.
புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்தால் மட்டுமே சூப்பர் 8க்கு தகுதி பெற முடியும். தற்போது பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன. USA அணியுடன் தோல்வி பாகிஸ்தானை பாதாளத்தில் தள்ளி உள்ளது. இன்று நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
எஞ்சியிருக்கும் அனைத்து ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று, அமெரிக்கா அணி இந்தியா மற்றும் அயர்லாந்திடம் தோற்றால் பாகிஸ்தான் தகுதி பெறும்.
ஒருவேளை இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தால், அமெரிக்கா அணி இந்தியா மற்றும் அயர்லாந்திடம் தோல்வியடை வேண்டும்.
அதே போல பாகிஸ்தானுக்கு நிகர ரன் ரேட்டும் கட்டாயம் தேவை. எனவே இன்றைய இந்தியாவிற்கு எதிரான போட்டி பாகிஸ்தானுக்கு வாழ்வா சால்வா என்ற நிலையை உருவாக்கி உள்ளது.