யார் இந்த ஜெஃப்ரி வாண்டர்சே? இந்திய அணியை புரட்டிப்போட்ட ஸ்பின்னர்!
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடிய 2வது ஒருநாள் போட்டியில் 97 ரன்கள் வரை விக்கெட்களை இழக்காத இந்திய அணி 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 241 ரன்கள் அடித்தது. இதனை எதிர்த்து ஆடிய இந்திய அணி மோசமாக பேட் செய்து அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தோல்வி அடைந்துள்ளது.
இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜெஃப்ரி வான்டர்சே. 2015ம் ஆண்டே இலங்கை அணியில் அறிமுகமானவர் ஜெஃப்ரி வான்டர்சே. ஆனால் இதுவரை 22 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியவர்.
நீண்ட காலமாக ஜெஃப்ரி வான்டர்சேவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் வனிந்து ஹசரங்காவிற்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் இந்த போட்டிக்கு முன்னதாக மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டார்.
ரோஹித், ஷுப்மான் கில், ஷிவம் துபே, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் விக்கெட்களை வெறும் 29 பந்துகளில் வெளியேற்றி இந்தியாவின் வெற்றியை பறித்தார்.
கடைசியில் அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வான்டர்சே 10 ஓவர்கள் வீசி 33 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.