IND vs AUS 1st Test போட்டியில் பங்கேற்கும் 11 வீரர்களின் பட்டியல்!!

Wed, 16 Dec 2020-11:33 pm,

மாயங்க் அகர்வால் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 974 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில் அவர் 3 சதங்களையும் அடித்துள்ளார்.

பிருத்வி ஷா இன்னும் நல்ல பார்முக்கு வரவில்லை. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடிய பயிற்சி போட்டியில் கூட அவரால் சிறப்பாக எதுவும் செய்ய முடியவில்லை. அவர் 4 இன்னிங்ஸ்களில் 62 ரன்கள் மட்டுமே எடுத்தார். முன்னதாக, ஐ.பி.எல். தொடரில், அவர் விளையாடிய 13 போட்டிகளில் 228 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அத்தகைய சூழ்நிலையில், இந்தியா அணி அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. 

இந்திய அணியின் பெரிய சுவர். டெஸ்ட் தொடரில் புஜாரா ஒரு முக்கியமான பங்களிப்பை செய்வார் எனத்தெரிகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி நான்காவது இடத்தில் பேட்டிங் செய்வார். அடிலெய்ட் மைதானம் விராட்டுக்கு மிகவும் அதிர்ஷ்டம். இந்த போட்டியில், அவரிடம் ஒரு பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கப்படும்.

இந்த போட்டியில் அஜின்கியா ரஹானே ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்ய வருவார். அடிலெய்டில் வெற்றி எவ்வளவு முக்கியம் என்பது அணிக்கு தெரியும். முதல் போட்டிக்கு இந்த அனுபவமிக்க வீரர் மீது அதிக அழுத்தம் இருக்கும்.

ஹனுமா விஹாரி இங்கிலாந்துக்கு எதிராக 2018-ல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவர் இதுவரை இந்தியாவுக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த முக்கியமான போட்டியில் விளையாடும் லெவன் அணியில் இடம் பெறுவது ஒரு பெரிய விஷயம். அத்தகைய சூழ்நிலையில், இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மற்றும் விருத்திமான் இருவரில் யாரை அணியில் இடம் பெற வைப்பது என நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் நல்ல பார்மில் உள்ள சஹாவுக்கு இடம் அளித்துள்ளது. சஹா மூன்று சதங்கள் உட்பட 37 டெஸ்ட் போட்டிகளில் 1238 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 92 கேட்சுகளையும் 11 ஸ்டம்புகளையும் செய்துள்ளார். 

இந்திய அணிக்கு சூழல் பந்து வீச்சாளர் தேவை என்ற முறையில் ரவிச்சந்திரன் அசுவின் சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்வினுக்கு நல்ல அனுபவம் மற்றும் மூத்த வீரர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அவர் எவ்வளவு வருத்தப்பட வைப்பார் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

ஜஸ்பிரித் பும்ரா மீது அதிக அழுத்தம் இருக்கும். ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் தனது ஸ்விக்கையும் வேகத்தையும் எவ்வாறு பயன்படுத்துவார் என்பதை மைதானத்தில் பார்க்கலாம்.

ஷமி சில காலமாக இந்திய வேகப்பந்து தாக்குதலில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். இந்த தொடரிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோருடன் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link