இந்தியா - நியூசிலாந்து போட்டியை லைவ்வாக பார்ப்பது எப்படி?
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய 20 ஓவர் அணி நியூசிலாந்து சுற்றுப் பயணம் செய்துள்ளது.
இவ்விரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் வெலிங்டனில் நாளை தொடங்குகிறது.
வழக்கமாக கிரிக்கெட் போட்டிகளை ஹாட்ஸ்டார் ஒளிபரப்பு செய்து வந்த நிலையில், நியூசிலாந்து தொடரை அமேசான் பிரைம் லைவ் செய்கிறது.
இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு போட்டி தொடங்குகிறது. உலக கோப்பைக்கு பிறகு நடைபெறும் முதல் தொடர் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டியை எதிர்நோக்கியுள்ளனர்.