IND vs SL: இந்தியா - இலங்கை டி20 போட்டி... எத்தனை மணிக்கு தொடங்கும்...? எந்த சேனலில் பார்ப்பது?

Fri, 26 Jul 2024-5:44 pm,

இந்திய அணி இப்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இரு அணிகள் மோதுகின்றன. 

 

இதில் டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ஜூலை 28 மற்றும் ஜூலை 30 ஆகிய தேதிகளில் மீதம் உள்ள இரண்டு டி20 போட்டிகளும் நடைபெற இருக்கின்றன.

 

டி20 போட்டிகள் அனைத்தும் பல்லேகலே நகரிலும், ஓடிஐ போட்டிகள் அனைத்தும் கொழும்பு நகரிலும் நடைபெறுகின்றன. மூன்று ஓடிஐ போட்டிகளும் ஆக. 2, 4, 7 ஆகிய தேதிகள் நடைபெறுகின்றன. 

 

இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் புதிதாக நியமிக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் சுற்றுப்பயணம் ஆகும். சூர்யகுமார் கேப்டனாகவும், சுப்மான் கில் துணை கேப்டனாகவும் செயல்படுகின்றனர். 

 

இலங்கை அணியில் தற்போது இடைக்கால தலைமை பயிற்சியாளராக சனத் ஜெய்சூர்யா நியமிக்கப்பட்டிருக்கிறார். கேப்டன்ஸியில் இருந்து ஹசரங்கா விலகிய நிலையில், சரியத் அசலங்கா கேப்டனாக தேர்வாகி உள்ளார். அந்த வகையில், முதல் டி20 போட்டிக்கு இரு அணிகளின் பிளேயிங் லெவன்களை இங்கு காணலாம்.  

 

இந்திய பிளெயிங் லெவன் (கணிப்பு): சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ்

 

இலங்கை பிளேயிங் லெவன் (கணிப்பு): அவிஷ்கா ஃபெர்னான்டோ, சரியத் அசலங்கா, பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ், தினேஷ் சண்டிமல், வனிந்து ஹசரங்கா, தசுன் ஷனகா, மதீஷா பதிரானா, மகேஷ் தீக்ஷனா, துனித் வெல்லாலகே, பினுரா ஃபெர்னான்டோ

 

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும். இந்த தொடரை நீங்கள் தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம். ஓடிடி என்றால் சோனி லிவ் (SonyLiv) தளத்தில் சந்தாவுடன் பார்க்கலாம்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link