Save Soil: 26 நாடுகள் பைக் பிரச்சாரம் செய்த சத்குருவை வரவேற்கும் தாய்மண்
சத்குருவுக்கு இந்திய கடற்படையினரிடமிருந்து உற்சாக வரவேற்பு கிடைத்தது.
கலாச்சார நிகழ்வுகள், நாட்டுப்புற நிகழ்ச்சிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில், தாயகத்திற்குக் திரும்பிய சத்குரு உரையாற்றினார். மண்ணைக் காப்பாற்றுவதற்கான உத்வேகத்தைத் தொடருமாறு ஈஷா நிறுவனர் கேட்டுக் கொண்டார்.
நமது மண்ணையும் கிரகத்தையும் காப்பாற்றும் முயற்சிகளை ஊக்குவிக்கும் உலகளாவிய இயக்கம் Save Soil Movement.
மண் அழிவு என்பது உலகளவில் முன்னோடியில்லாத சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக பேரழிவுகளுக்கு வழிவகுக்கும். தீவிரமடையும் பருவநிலை மாற்றம், உலகளாவிய உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, உள்நாட்டு சண்டைகள், தேசத்தின் பாதுகாப்பு மற்றும் கலாச்சார கட்டமைப்பை அச்சுறுத்தும் கண்டங்கள் முழுவதும் புலம்பெயர்ந்தோர் வெளியேறுதல் ஆகியவற்றுக்கு மண் அழிவு வழிவகுக்கும்
மண்ணை பாதுகாப்போம் என்பது, பாலைவனமாக்கலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCCD), ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), UN உலக உணவுத் திட்டம் மற்றும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) ஆகியவற்றின் ஆதரவை பெற்ற இயற்கையை பாதுகாக்கும் திட்டம்.