முகமது சிராஜ் வாங்கியுள்ள புதிய Range Rover கார்! விலை இத்தனை கோடியா?

Mon, 12 Aug 2024-11:18 am,

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக முகமது சிராஜ் உள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பாடு வருகிறார்.

 

முகமது சிராஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் தனது குடும்பத்தினருக்காக இந்த காரை வாங்கியுள்ளார். 

 

புதிய கருப்பு நிற எஸ்யூவியுடன் சிராஜ் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

 

உங்கள் கனவுகளுக்கு வரம்புகள் இல்லை, ஏனெனில் அவை உங்களை கடினமாக உழைக்க தூண்டும். நிலைத்தன்மையுடன் நீங்கள் எடுக்கும் முயற்சியே உங்களை முன்னோக்கி அழைத்துச் செல்லும் என்று கேப்சனில் பதிவிட்டுள்ளார்.

 

ரேஞ்ச் ரோவரின் காரின் ஆரம்ப விலை 2.98 கோடி ரூபாயில் இருந்து தொடங்கி, 5.19 கோடி ரூபாய் வரை உள்ளது.  சிராஜிடம் ஏற்கனவே Benz, BMW, Toyota Fortuner, Mahindra Thar போன்ற கார்கள் உள்ளன. 

 

பிசிசிஐ வருடாந்திர சம்பளம், ஐபிஎல் சம்பளம் மற்றும் விளம்பரங்கள் மூலம் சிராஜ் வருமானம் பெறுகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 60 முதல் 80 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link