இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சில ரயில்கள்...!!

Wed, 05 Jun 2024-10:51 am,

இந்திய இரயில்வே ஆசியாவின் இரண்டாவது பெரிய இரயில் வலையமைப்பு. உலகின் நான்காவது பெரிய இரயில்வே நெட்வொர்க் ஆகும்.  இந்திய ரயில்வே நாடு முழுவதும் பல ரயில்களை இயக்குகிறது. இதில், இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு நேரடியாக செல்ல 7 ரயில் நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு ரயிலில் செல்லலாம்.

ராதிகாபூர்: வங்க தேசத்தின் எல்லை மாநிலமான, மேற்கு வங்க மாநிலம் ராதிகாபூர் ரயில் நிலையம், ஜீரோ பாயிண்ட் ரயில் நிலையம் என அழைக்கப்படுகிறது. குறிப்பாக, சரக்கு போக்குவரத்திற்காக, இங்கிருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சோக்பானி: பீகாரில் உள்ள சோக்பானி ரயில் நிலையத்தில் இருந்து நேபாளத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நேபாளத்திற்கு மிக அருகில் உள்ள இந்த ரயில் நிலையம் மூலம் நேபாளத்திற்கு நடந்தே கூட சென்றுவிடலாம். அந்த அளவிற்கு குறைவான தூரத்தில் நேபாள எல்லை உள்ளது.

சிங்காபாத்: வங்க தேசத்தின் எல்லை மாநிலமான, மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் இருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் மூலம் ரோகன்பூர் வழியாக வங்கதேசத்திற்கு பயணிக்கலாம்.

பெட்ராபோல்: வங்க தேசம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஏற்றுமதி - இறக்குமதிக்கு உதவும் வகையில் பெட்ராபோல் ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஜெய்நகர்: பீகார் மாநிலம் மதுபானியில் இருந்து  இந்தியா - நேபாளத்திற்கு இடையே இயக்கப்படும் ரயில் சேவை மூலம் எளிதாக நேபாளத்திற்கு செல்லலாம். பீகாரில் இருந்து நேபாளத்திற்கு அடிக்கடி செல்லும்  மக்கள் இந்த ரயிலைத் தான் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹல்திபாரி: மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பாய்குடி ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.  அங்கிருந்து சுமார் 4.5 கி.மீ., தூரம் பயணித்தாலே வங்கதேசத்தை அடைந்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டாரி: பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அட்டாரி ரயில் நிலையம் மிகவும் பிரபலமான ரயில் நிலையம். வடக்கு ரயில்வேயின் கடைசி ரயில் நிலையமாக இருக்கும் வழியாக பாகிஸ்தானுக்கு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படுகின்றன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link