RAC பயணிகளுக்கு நல்ல செய்தி, ஏசி சீட் கிடைக்கும்... இந்திய ரயில்வே முக்கிய நடவடிக்கை..!
நாள்தோறும் கோடிக்கணக்கானவர்கள் பயணிக்கும் ரயிலில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே (Indian Railways) பல முக்கிய நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு நல்ல செய்தி என்றே சொல்லலாம்.
ஏனென்றால் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சீட் உறுதியாக கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இறுதிகட்ட நேரத்தில் டிக்கெட் இல்லாமல் போகலாம் அல்லது ஆர்ஏசி ஒதுக்கப்படும். அதாவது புக்கிங் கோச்சில் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.
இவர்களுக்கு தான் இப்போது நல்ல செய்தி வந்திருக்கிறது. ஆர்ஏசி பயணிகளுக்கு இனி ஏசி கோச்சில் சீட் கிடைக்கும். இப்போது AC பெட்டிகளில் RAC புக்கிங்கில் இருந்தால், ரயில் டிக்கெட் ரத்துசெய்யப்படுவதற்கு முன்பு ரயில் பயணிகளும் முழு படுக்கை வசதி கிடைக்கும்.
இதற்கு முன்பாக, RAC டிக்கெட்டில் பயணிக்கும் இரண்டு பயணிகளுக்கு ஒரே படுக்கை சீட் வழங்கப்பட்டது. இருவரும் ஒரே சீட்டை பகிர்ந்து கொள்ள வேண்டும். இது சிரமத்திற்கும் வாக்குவாதத்திற்கும் வழிவகுத்து கொண்டிருக்கிறது.
இப்போது இந்திய ரயில்வே எடுத்திருக்கும் நடவடிக்கையில் ஆர்ஏசி டிக்கெட் பயணிகளுக்கு இரண்டு பெட்ஷீட்கள், ஒரு போர்வை, ஒரு தலையணை மற்றும் ஒரு துண்டு ஆகியவற்றை உள்ளடக்கிய பேக்கேஜ் கிடைக்கும்.
RAC டிக்கெட்டைப் பெற்ற பயணிகள் முழுக் கட்டணத்தையும் செலுத்துகிறார்கள். ஆனால் ஜன்னல் ஓரத்தில் இருக்கும் லோயர் பெர்த்தின் பாதி இருக்கையில் பயணிக்க வேண்டியிருக்கிறார்கள். இப்படி பயணிக்கும்போது ரயில் பயணிகள் தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் போலவும் உணர செய்கிறார்கள்.
இருப்பினும், இப்போது இந்த பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள்போல படுக்கை வசதியைப் பெறலாம். இந்திய ரயில்வேயில் பணியாற்றும் பிஆர்ஓ அசோக் குமார் பேசும்போது, ரயிலில் ஆர்ஏசி டிக்கெட்டில் பயணிப்பவர்களுக்கு ஏசி கோச்சில் இடம் இருந்தால் அங்கு டிக்கெட் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
ரயிலில் உள்ள டிடிஆர் கூட இந்த முடிவை எடுக்கலாம். அதற்கு முன்பே டிக்கெட் கன்பார்ம் லிஸ்ட் கடைசியாக விடும்போது ஏசி பெட்டிகளில் சீட் ஒதுக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார் அவர்.
அசோக்குமார் மேலும் பேசும்போது, " RAC பயணிகளுக்கு நல்ல செய்தி. கன்பார்ம் டிக்கெட்டுகளுடன் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் அதே வசதிகள் இனி இவர்களுக்கும் கிடைக்கும். ஏசி சீட் ஒதுக்கப்படும். ஆனால் சீட் இருந்தால் மட்டுமே இது கிடைக்கும்.