Rail Coach Restaurant: ரயில் பெட்டியை உணவமாக மாற்றி அசத்தும் ரயில்வே!
மேற்கு மத்திய ரயில்வேயின் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் பழைய ரயில்வே பெட்டியை உணவகமாக மாற்றி ரயில் நிலையம் ‘Rail Coach Restaurant’ என புதுமையை செய்து அசத்தியுள்ளது.
NFR (non-fare revenue) கட்டணம் அல்லாத வருவாய் என்ற யோசனையின் அடிப்படையில், ரயில்வே சொத்துக்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தும் திட்டத்தின் கீழ் பழைய ரயில் பெட்டியை உணவகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உணவகத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை தரும் நோக்கில் ரயில்வே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, மத்திய ரயில்வே மண்டலத்தின் நாக்பூர் கோட்டம் பழைய ரயில்வே பெட்டியை உணவகமாக மாற்றிய நாக்பூர் ரயில் நிலையம் முதன்முதலில் ‘Restaurant on wheels’ என புதுமையை செய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.