Top 5 Shares: உச்சத்தைத் தொடும் பங்கு விலைகள்! முதலீடு செய்ய ஏற்ற டாப் 5 பங்குகள்

Mon, 03 Jul 2023-11:33 pm,

சென்செக்ஸ் 65300 என்ற அளவைத் தொட்ட நிலையில், நிஃப்டி 19340 என்ற அளவைக் கடந்துள்ளது. இதனால் சந்தையும் அதிக அளவிலான புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியும் இறுதியாக  மிக அதிக அளவைக் குறிக்கும் பச்சை நிறத்தில் முடிவடைந்தது.  

தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பங்குகளை வாங்க தரகு நிறுவனங்கள் பரிந்துரைக்கின்றன. தற்போதைய விலையை விட இந்த பங்குகளில் 42 சதவீதம் வரை வலுவான வருமானம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால், ஐசிஐசிஐ லோம்பார்டில் வாங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஜூன் 30, 2023 அன்று விலை ₹ 1,341. இந்த பங்கு, ₹1550 வரை போகலாம். முதலீட்டாளர்கள் ஒரு பங்கிற்கு 16% வருமானம் பெறலாம்.

தரகு நிறுவனமான எம்கே, கோத்ரெஜ் கன்ஸ்யூமர் பங்கை வாங்க பரிந்துரை செய்துள்ளது. ஜூன் 30, 2023 அன்று விலை ₹ 1,081 என்ற அளவில் இருந்தது, இந்த பங்கு, ₹1225 வரை விற்பனையாகலாம். முதலீட்டாளர்கள் ஒரு பங்கிற்கு 13% வருமானம் பெறலாம்.

தரகு நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், மஹாநகர் கேஸ் பங்கை வாங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது. ஜூன் 28, 2023 அன்று, 1050 ரூபாயாக இருந்த இந்த பங்கு விலை, ₹1290 வரை அதிகரிக்கலாம். முதலீட்டாளர்கள் ஒரு பங்கிற்கு 23% வருமானம் பெறலாம்.  

தரகு நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், பிவிஆர் ஐநாக்ஸ் பங்கை வாங்க அறிவுறுத்தியுள்ளது. 30 ஜூன் 2023 அன்று, ₹ 1375 ஆக இருந்த இதன் விலை, ₹1950 ஆக அதிகரிக்கலாம். அப்போது, முதலீட்டாளர்கள் ஒரு பங்கிற்கு 42% வருமானம் பெறலாம்.

தரகு நிறுவனமான Religare ப்ரோக்கிங் GHCL இல் வாங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது. இலக்கு ₹568. ஜூன் 30, 2023 அன்று ₹ 515 ஆக இருந்தது. முதலீட்டாளர்கள் ஒரு பங்கிற்கு 11% வருமானம் பெறலாம்.

தரகு நிறுவனமான Religare ப்ரோக்கிங் GHCL இல் வாங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது. இலக்கு ₹568. ஜூன் 30, 2023 அன்று ₹ 515 ஆக இருந்தது. முதலீட்டாளர்கள் ஒரு பங்கிற்கு 11% வருமானம் பெறலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link