Olympic wrestlers in India: ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த பதக்கம் வென்ற இந்தியர்கள்
2012 லண்டன் ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் தத் வெண்கலம் வென்றார்.
சுஷில் குமார் 2012 ஆம் ஆண்டு லண்டன் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 2008 பெய்ஜிங் விளையாட்டுப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சுஷில் குமார், இரு ஒலிம்பிக் பதக்கங்கள் பெற்ற இந்தியாவின் ஒரே மல்யுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
சாக்ஷி மாலிக் 2016 ரியோ விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று, ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தினார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் கஜகஸ்தானின் நூரிஸ்லாம் சனாயேவுக்கு எதிராக வெற்றிபெற்ற ரவிக்குமார் தஹியா, ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 57 கிலோ மல்யுத்தப் பிரிவில் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.
கேடி ஜாதவ் இந்தியாவின் முதல் மல்யுத்த வீரர். 1952 ஹெல்சின்கி விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றார். முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் மல்யுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார் கே.டி.ஜாதவ்.