Noor Jahan Mango: ஒரு மாம்பழத்தின் விலை 1000 ரூபாய் -அதன் சிறப்பு என்ன
இந்த மாம்பழத்தின் பெயர் நூர் ஜகான். இந்த மாம்பழம் "மல்லிகா" என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த மாம்பழத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த மாம்பழங்களை வாங்குவதற்கு முன்கூட்டியே புக்கிங் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு நூர்ஜஹான் மாம்பழங்கள் சந்தையில் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை நல்ல அறுவடை கிடைத்துள்ளது. இந்த மாம்பழத்தின் எடை காரணமாக, இந்த மாம்பழங்கள் பழுக்குமுன் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
இந்தூரிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள கதிவாடாவின் மா வளர்ப்பாளர் சிவ்ராஜ் சிங் ஜாதவ் என்பவர், இந்த மாம்பழத்தை பயிரிட்டுள்ளார். இதன் எடை சுமார் இரண்டிலிருந்து மூன்றரை கிலோகிராம் வரை இருக்கும் என்று அவர் கூறினார். குஜராத் மக்கள் இந்த மாம்பழத்தை மிகவும் விரும்புகிறார்கள்.
தன்னிடம் மொத்தம் 3 மா மரங்கள் இருப்பதாகவும், மூன்று மரங்களிலும் மொத்தம் 250 நூர்ஜா மாம்பழங்கள் காய்த்துள்ளது என்று கூறினார். இந்த மாம்பழங்கள் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாம்பழம் 500 முதல் 1000 ரூபாய் வரை, எடையை பொறுத்து விற்பனை செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.
நிபுணர்களின் கூற்றுப்படி, நூர்ஜஹான் மா மரம் ஜனவரி-பிப்ரவரி மாதத்தில் பூக்கத் தொடங்குகிறது. ஜூன் மாதம் முதல் மாம்பழங்கள் பழுக்கத் தொடங்கியதும் சந்தையில் விற்கப்படுகிறது. இந்த பொதுவாக ஒரு அடி நீளம் வரை வளரக்கூடியது. இதன் கொட்டை 150200 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும்.