அடம்பிடிக்கும் சுகர் லெவலை அசால்டாய் குறைக்கும் மலிவான உணவுகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு பொதுவாகவே எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்ற குழப்பம் ஏற்படுவதுண்டு. சுகர் நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு மிக அவசியமாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு நிவாரணம் அளித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் சில மலிவான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பாகற்காய்: காய்களில் பாகற்காய் சுகர் நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த காயாக உள்ளது. பாகற்காய் உடலில் இரத்த சர்க்கரையை குறைக்க பெரிய அளவில் நன்மை பயக்கும். பாகற்காயில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடிக்கலாம்.
பிரவுன் ரைஸ்: பொதுவாக முழு தானியங்களை அதிகமாக உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பழுப்பு அரிசியை வாரத்திற்கு 2-3 முறை சாப்பிட்டால், சுகர் நோயாளிகள், அதன் ஆபத்தை 12 சதவீதம் குறைக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மிளகாய்: 'ஜர்னல் ஆஃப் அக்ரிகல்ச்சரல் அண்ட் ஃபுட் கெமிஸ்ட்ரி'யில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, மிளகாயில் காரமான தன்மையைக் கொடுக்கும் கேப்சைசின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும். இது சர்க்கரை நோயின் அபாயத்தை பெருமளவு குறைக்கும். ஆகையால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிளகாய் நல்லதாக கருதப்படுகின்றது.
வேம்பு: வேம்பு சுகர் நோயாளிகளுக்கு சிறந்ததாக கருதப்படுகின்றது. நீரிழிவு நோயாளிகள் வேப்பிலையை அப்படியே கடித்தும் சாப்பிடலாம். வேம்பு, குளுக்கோஸ் டிரான்ஸ்போர்ட்டர் 4 (GLUT4) மற்றும் குளுக்கோசிடேஸ் போன்ற முக்கிய குடல் நொதிகளைத் தடுத்து அதன் மூலம் அதிக குளுக்கோஸ் உரிஞ்சப்படுவதை சீர் செய்கிறது. இரத்த சர்க்கரை நோய் இருந்தால், வேப்பம்பூ, வேப்பிலை, வேம்பு பொடி ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து சாறு குடிக்கலாம்.
திராட்சை: திராட்சையை தொடர்ந்து உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும் என 'கொரிய ஜர்னல் ஆஃப் ஃபேமிலி மெடிசினில்' வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40-69 வயதுடையவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுகர் லெவலை குறைக்க திராட்சை பெரிய அளவில் பயன்படும் என்பது தெரியவந்துள்ளது.
கொண்டைக்கடலை: கொண்டைக்கடலையை தொடர்ந்து சாப்பிடுவதும் சர்க்கரை நோயைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. இதில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. இதன் காரணமாக, வயிற்றில் நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு இருக்கும். இது உடல் பருமன் மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்.
தயிர்: தினசரி 80-125 கிராம் தயிர் சாப்பிட்டால், இதய நோய் அபாயத்தை 14 சதவீதம் குறைக்கலாம் என 'ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன்' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயிர் பாலில் இருந்து வருகிறது. இது டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவும்.
இவற்றுடன் நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை உட்கொண்டு அவர் சொல்லும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். மேலும், அவ்வப்போது இரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்வதும் மிக அவசியம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.