டிவிட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராமில் வரும் புது அம்சம்..!
பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தங்கள் மனதில் நினைக்கும் கருத்துக்களை உடனுக்கு உடன் இதில் பகிர்ந்துகொள்ள முடிகிறது.
ஆனால் இன்ஸ்டாகிராமில் படங்களையும் ரீல்ஸ் போன்றவைகளும் அதிகம் பகிரப்படுகிறது. எனவே பயனர்களின் வசதிக்காக மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் இந்த புதிய வசதிகளை அறிமுகம் செய்ய விரும்புகிறது.
பேஸ்புக், ட்விட்டர் பயனர்களுக்கு தேவையான புதிய வசதிகளையும் அவ்வப்போது அந்த நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றன. அதிலும், குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து அதன் போட்டியாளரான மெட்டா நிறுவனம் பல்வேறு அப்டேட்களை அறிமுகப் படுத்தி வருகிறது.
இதன் ஆரம்ப கட்ட முயற்சியில் இன்ஸ்டாகிராம் நிறுவன நிபுணர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த புதிய செயலி மூலம் பயனர்கள் 1,500 வார்த்தைகள் வரை டைப் செய்ய முடியும் என்றும், லிங்குகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் மெசேஜ் செய்யும் அம்சம் இருந்தாலும் படங்கள், வீடியோக்கள் பதிவேற்றும் செயலியாகவே பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில், ட்விட்டர் போன்று செய்திகளைப் பகிரும் புதிய தளத்தை உருவாக்க இன்ஸ்டாகிராம் இறங்கியுள்ளது. இந்த புதிய செயலி வரும் ஜூன் மாதம் அறிமுகப் படுத்தப் படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.