நடிகை சாய் பல்லவி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
சாய் பல்லவியின் நடனம் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும், இதற்கென இவர் சிறு வயதிலிருந்தே பயிற்சி பெற்றிருக்கக்கூடும் என்று நினைக்கும் அளவிற்கு இவரது நடனம் இருக்கும். ஆனால் இவர் அவ்வாறு எவ்வித பயிற்சியும் பெறவில்லையாம் மாதுரி தீக்ஷித் மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்றவர்களின் நடனத்தை பார்த்து தானே நடனம் கற்றுக்கொண்டு இருக்கிறார்.
இவர் நடிப்பு துறைக்கு வராவிட்டால் இந்நேரம் இதய நோய் நிபுணராக இருந்திருப்பார். ஜார்ஜியாவில் மருத்துவம் படித்த இவர் முழுநேர மருத்துவராக இருந்தார். பின்னர் பட வாய்ப்பு கிடைத்ததும் இவர் தென்னிந்திய திரையுலகில் கால் பதித்துவிட்டார்.
இவர் கோத்தகிரி பகுதியில் உள்ள படுகா இனத்தை சேர்ந்தவர், முதல்முறையக இந்த இனத்திலிருந்து வந்து திரைத்துறையில் சாதனை படைத்திருப்பவர் இவர்தான்.
சாய் பல்லவிக்கு பிரேமம் படம் முதல் படமல்ல. ஏற்கனவே 2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தில் கதாநாயகியாக நடித்த கங்கனா ரணாவத்திற்கு உறவுக்கார பெண்ணாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடித்திருந்த போது அவருக்கு 16 வயது தான்.
தற்போது பிரபலமாக இருக்கும் சாய் பல்லவி சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மிகுந்த கூச்ச சுபாவம் உடையவராக இருந்தவராம்.