இந்திய ரூபாய் நோட்டுகள் பற்றி இந்த விஷயங்கள்லாம் தெரியுமா?
ஷேர் ஷா சூரி என்பவரால் 1540-45ல் முதன்முதலாக நாணயம் அச்சிடப்பட்டது, இது அப்போது ரூபியா என்று அழைக்கப்பட்டது.
இந்தியா சுதந்திரமடைந்த பின் 1 வருடத்திற்கு பாகிஸ்தான் நாட்டு பணத்தை இந்தியா அச்சடித்தது, பாகிஸ்தான் சில மாற்றங்களை செய்து இந்தியாவின் பணத்தை பயன்படுத்தியது.
1946, 1978 மற்றும் 2016 என மூன்று முறை இந்தியாவில் பணமதிப்பிழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு பணத்திலும் அதன் மதிப்பு 17 மொழிகளில் எழுதப்பட்டுள்ளது, அதில் ஒன்றே ஒன்று மட்டும் சர்வேதேச மொழியான நேபாள மொழியாகும்.
ரபீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கடந்த 2012ல் இந்தியாவில் 150 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. டாலர், பவுண்ட், யென், யூரோ மற்றும் ரூபீ என்று ஐந்து சின்னங்கள் நாணயத்திற்கு உள்ளது.