SIP மூலம் லட்சக்கணக்கில் லாபம் ஈட்ட Tips & Tricks! மாசம் ஆயிரம் ரூபாய் போதும் ஜென்டில்மேன்!
எந்த திட்டத்திலும் கிடைக்காத அளவு வருமானம் SIP மூலம் சாத்தியமாகும். இந்தத் திட்டத்தில் கூட்டு வட்டி கிடைக்கும் என்பதும், சராசரி வருமானம் 12 சதவீதம் என்றால் இதைவிட வேறு சிறந்த திட்டம் ஏதும் இருக்க முடியுமா?
SIP மூலம் தொடர்ந்து 35 வருடங்கள் 1000 ரூபாயை பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தால் அது கணிசமான தொகையாக வளர்ந்துவிடும்
35 ஆண்டுகளில் 12 சதவீத கூட்டு வட்டியை கணக்கிட்டால் அது சுமார் 60 லட்சம் ரூபாயாக இருக்கும். முதலீடு செய்த தொகை மற்றும் வட்டித் தொகையை சேர்த்து தோராயமாக 65 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
SIP மூலம் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யப்படுகிறது, இது சந்தை அபாயங்களுடன் தொடர்புடையது. இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளின் நிலைமையை வைத்துப் பார்த்தால், பரஸ்பர நிதிகள் நல்ல லாபம் கொடுக்கின்றன
கடந்த ஆண்டுகளில் பரஸ்பர நிதியில் 15, 20 சதவீதம் கூட லாபம் கிடைத்துள்ளது எனப்தன் அடிப்படையில் 12 சதவிகிதம் என கணக்கிடலாம்.
சந்தை அபாயங்கள் இருந்தாலும் கூட, இந்த அளவு வருமானம் வேறு எந்த திட்டத்திலும் கிடைக்காது என்பதால் தான், கடந்த சில ஆண்டுகளில் SIP முதலீடு கவனம் பெற்று வருகிறது
மியூச்சுவல் ஃபண்டு எனப்படும் பரஸ்பர நிதிகள், முதலீட்டாளர்களுக்கு அவர்களின் நிதி இலக்குகளைத் திட்டமிடுவதற்கும், நிதானமாக செயல்படுவதற்கும் உதவுகிறது. முதலீடு செய்யும் போது பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதால் 12 சதவிகித லாபம் கிடைப்பது சாத்தியமானதே...
இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கும், கணக்கீடுகளுக்கும் ஜீ மீடியா பொறுப்பேற்காது