சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு புதிய சீருடை- In Pics!

Thu, 25 Mar 2021-12:17 pm,

வருகிற 9 ஆம் தேதி தொடங்கும் 14வது IPL 2021 கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வரும் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை புதிய சீருடையுடன் களம் இறங்குகிறது. 

சென்னை அணி முதல் முறையாக அதன் வடிவமைப்பில் மாற்றம் செய்துள்ளது. தேசத்தை பாதுகாக்கும் ராணுவ படையினரை கவுரவிக்கும் விதமாக ராணுவ சீருடைக்குரிய நிறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சீருடையின் தோள்பட்டை பகுதியில் இடம் பெற்றுள்ளது.

 

Up close and personal! The story of the all new #Yellove wear  https://t.co/HQrfg59FMf  - https://t.co/qS3ZqqhgGe#WhistlePodu  pic.twitter.com/c3plGuaLDz

— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2021

 

இது குறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘ராணுவத்தின் முக்கியத்துவத்தையும், அவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டும் விதமாகவும், அது குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கிலும் எங்கள் அணியின் சீருடையில் ராணுவ சீருடையின் வண்ணத்தை இணைத்துள்ளோம். ராணுவ வீரர்கள் தான் நாட்டின் உண்மையான ஹீரோக்கள்’ என்றார்.

Chennai Super Kings அணியின் கேப்டன் தோனி புதிய ஜெர்சியை வெளியிடும்வகையிலும் CSK வீடியோ வெளியிட்டுள்ளது. பேக்கிலிருந்து ஜெர்சியை எடுக்கும் தல தோனி, அதை அறிமுகப்படுத்திவிட்டு, மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க என்றும் கூறியுள்ளது.

 

Thala Dharisanam! #WearOnWhistleOn with the all new #Yellove! #WhistlePodu  - https://t.co/qS3ZqqhgGe pic.twitter.com/Gpyu27aZfL

— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2021

 

ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதி இறுதிப்போட்டியுடன் நிறைவடையவுள்ளது. இதையொட்டி அனைத்து அணிகளும் ஏறக்குறைய தங்களது பயிற்சி போட்டிகளை துவங்கியுள்ளன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link