ஐபிஎல் 2022: 10 அணியின் புதிய கேப்டன்கள்!

Thu, 17 Feb 2022-7:51 pm,

சென்னை சூப்பர் கிங்ஸ் - எம்எஸ் தோனி

தோனியை இன்னும் ஓராண்டுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக வைத்திருக்கும். நான்கு ஐபிஎல் கோப்பைகளை வென்ற ஐபிஎல்லின் இரண்டாவது வெற்றிகரமான கேப்டன் தோனி. 

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா கேப்டனாகத் தக்கவைக்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனாக அவர் ஐந்து பட்டங்களை வென்றுள்ளார். ரோஹித் சர்மா ஐபிஎல்லில் விளையாடும் சிறந்த தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவர், மேலும் அணியில் அவரது பங்கு மிக முக்கியமானது.

டெல்லி கேப்பிடல்ஸ் - ரிஷப் பண்ட்

ஐபிஎல் 2021 தொடக்கத்தில் ஸ்ரேயேஷ் ஐயரின் காயம் காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் ரிஷப் பந்தை அணியின் கேப்டனாக மாற்றினர். ரிஷப் பந்தின் தலைமையின் கீழ், அந்த அணி பதினைந்தில் ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்று சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டும் இவரே  கேப்டனாக தொடர்வார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிளென் மேக்ஸ்வெல் 

ஐபிஎல் தொடரில் 206 போட்டிகளில் விளையாடி 6244 ரன்கள் குவித்துள்ளார் விராட் கோலி.  ஆனால், கோஹ்லி தலைமையிலான ஆர்சிபி ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.  கடந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் புதிய கேப்டனாக கிளென் மேக்ஸ்வெல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- கேன் வில்லியம்சன் 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் வார்னரை கடந்த சீசனில் நீக்கியது.  தற்போது கேன் வில்லியம்சனிற்கு கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஷ்ரேயாஸ் ஐயர் 

IPL 2022 மெகா ஏலத்தில் KKR அணி நிர்வாகம், ஸ்ரேயாஸ் ஐயரை 12.25 கோடிக்கு வாங்குகிறது. மேலும் புதிய கேப்டனாகவும் அறிவித்துள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் - சஞ்சு சாம்சன் 

இந்த ஆண்டும் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் தொடரவுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் - ஹர்திக் பாண்டியா 

ஐபிஎல் 2022 இல் இரண்டு புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று அகமதாபாத். இந்த புதிய அணிக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கேஎல் ராகுல் 

கேஎல் ராகுலை 15 கோடிக்கு வாங்கிய லக்னோ அணி அவரை கேப்டனாக அமர்த்தியுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் - மயங்க் அகர்வால் 

முன்னாள் கேப்டன் கே.எல். ராகுல் வேறு ஒரு அணிக்கு சென்றுள்ளதால் மயங்க அகர்வால் கேப்டனாக ஆகா அதிக வாய்ப்பு உள்ளது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link