KKR vs RR: சுனில் நரைன் காட்டடி... 49 பந்துகளில் சதம்அசத்தல்! கேகேஆர் 223 ரன்கள் குவிப்பு
அதன்படி கொல்கத்தா அணியில் பிலிப் சால்ட் உடன் ஓப்பனிங் இறங்கிய சுனில் நரைன் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் தடுமாறினாலும் அதன்பிறகு பந்துகளை எல்லாம் பறக்கவிட்டார்.
சிக்சரும் பவுண்டரியுமாக வெளுத்து வாங்கிய சுனில் நரைன் 49 பந்துகளில் 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் குறைந்த பந்துகளில் ஐபிஎல் போட்டியில் சதமடித்த பிளேயர்கள் பட்டியலில் சுனில் நரைன் பெயரும் இடம்பெற்றது.
இப்போட்டியில் மட்டும் சுனில் நரைன் 6 சிக்சர்கள், 13 பவுண்டரிகளை விளாசினார். கடைசியாக 56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்திருந்தபோது போல்ட் பந்துவீச்சில் போல்டு என்ற முறையில் அவுட்டாகி வெளியேறினார்.
சுனில் நரைன் சதமடித்ததும் கொல்கத்தா அணியினர் பெவிலியனில் துள்ளிக் குதித்தனர். குறிப்பாக அந்த அணியின் ஓனர் ஷாருக்கான் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார். கைத்தட்டி நரைனுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார் அவர்.
இந்த சதத்துக்குப் பிறகு ஒரு எலைட் சாதனை லிஸ்டிலும் நரைன் இடம்பிடித்தார். அதாவது, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்ததுடன் பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் சுனில் நரைனும் இணைந்தார். இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா, ஷேன் வாட்சன் ஆகியோர் உள்ளனர்.
முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. சுனில் நரைனுக்கு அடுத்தபடியாக ரகுவன்ஷி 30 ரன்களும், ரிங்கு சிங் 9 பந்துகளில் 20 ரன்களும் எடுத்தனர்.