IPL 2024: ஆர்சிபி அணிக்கு இன்னும் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளதா?
ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
தற்போது புள்ளிபட்டியலில் 2 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த SRH 287 ரன்கள் எடுத்தது. இதனை எதிர்த்து ஆடிய RCB 262 ரன்கள் மட்டுமே அடித்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐபிஎல் 2024 பிளேஆஃப்களுக்கு தகுதி பெற ஆர்சிபி மீதமுள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதுமட்டும் இல்லாமல் மற்ற அணிகள் தோல்வி அடைய வேண்டும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவர்களின் அடுத்த 7 ஐபிஎல் லீக் போட்டியில் ஒவ்வொன்றிலும் வெற்றி பெற வேண்டும். ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் தகுதி பெறுவது மிகவும் கடினமாக மாறிடும்.