12 ஜிபி RAM, அசத்தல் கேமரா... iQOO மொபைலுக்கு ரூ.4 ஆயிரம் நேரடி தள்ளுபடி!

Sun, 07 Jan 2024-2:46 pm,

iQOO Neo 7 ஸ்மார்ட்போனின் விலையை நிறுவனம் குறைத்துள்ளது. இது முதல் முறை அல்ல. இதற்கு முன், 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், iQOO அதன் விலையை 2 ஆயிரம் ரூபாய் வரை குறைத்தது. இந்த முறை அதனை விலையை 4 ஆயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளது. 

டிஸ்ப்ளே: இந்த ஸ்மார்ட்போனில் 2400 × 1080 பிக்சல் ரெஸ்சோல்யூசன் கொண்ட 6.78 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே உள்ளது. திரையின் புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) 120Hz ஆகும்.

ஸ்டோரேஜ்: ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. அடிப்படை வேரியண்ட் 8 ஜிபி RAM உடன் 128 ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. ஸ்மார்ட்போனின் டாப் வேரியண்ட் 12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

பிராஸஸர்: இந்த iQOO ஸ்மார்ட்போனில் MediaTek Dimensity 8200 5G பிராஸஸர் உள்ளது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Funtouch OS 13 இல் இயங்குகிறது. ஸ்மார்ட்போன் இரண்டு வண்ண ஆப்ஷன்களில் வருகிறது.

பேட்டரி: இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. சார்ஜ் செய்ய USB Type-C போர்ட் உள்ளது. 

போனின் பின்புறம் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது OIS ஆதரவுடன் 64MP பிரதான கேமரா, 2MP டெப்த் கேமரா மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் LED ப்ளாஷ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 16MP முன்பக்க கேமராவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் விலை செப்டம்பர் மாதம் 2000 ரூபாய் குறைக்கப்பட்டது. அதாவது, 27 ஆயிரத்து 999 ரூபாயில் இருந்து விற்கப்பட்டது. டாப் வேரியண்ட் 31 ஆயிரத்து 999 ரூபாய்க்கு கிடைத்தது. இப்போது அடிப்படடை வேரியண்டின் விலை 3 ஆயிரம் ரூபாயும் மற்றும் டாப் வேரியண்டின் விலை 4 ஆயிரம் ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் சலுகைக்கு பின் தற்போது 24 ஆயிரத்து 999 ரூபாய் ஆகிவிட்டது. டாப் வேரியண்டின் விலை 4 ஆயிரம் ரூபாய் குறைந்து, 27 ஆயிரத்து 999 ரூபாய் ஆக உள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link