9 லட்சம் மதிப்புள்ள இஷா அம்பானி உடை!அப்படி என்ன ஸ்பெஷல்?
இஷா அம்பானி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோது ஷாருக்கான் மனைவி கௌரிகான்,அனன்யா பாண்டே ஆகியோருடன் இருக்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
‘Harper's Bazaar Women of the Year’விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஷா அம்பானி லேபிள் சியாபரெல்லியின் இத்தாலிய வடிவமைப்பாளர் கருப்பு மற்றும் வெள்ளை தோற்றத்தில் வடிவமைத்த உடையை அணிந்திருந்தார். இதில் மேல் ஆடையில் தங்க பட்டன்,பாவாடையில் பிரமிக்க வைக்கும் இஷா அம்பானியின் உடை.
கோல்டன் செயின் பட்டைகள் முன்பக்கத்தில் S சின்னம் கொண்ட பெரிய கோல்டன் பட்டன் மின்னும்.ஆடையின் பின்பக்கத்தில் x வடிவத்தில் அட்ஜஸ்ட் டேப் பட்டன் பாவாடையில் இரண்டு வெல்ட் பாக்கெட்டுகள். மேலும் மொத்தத்தில் இதன் நிகர மதிப்பு சுமார்₹9,11,700 எனக் கூறப்படுகிறது.
அம்பானி வீட்டின் மகள் இஷா அம்பானி இவர் ஆனந்த் பிரமல் என்ற தொழிலதிபரை 12 டிசம்பர் 2018 ஆண்டு அம்பானி வீட்டில் திருமணம் நடைப்பெற்றது. திருமணம் ஆன சில நாட்களுக்கு பிறகு இஷா அம்பானிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.
ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த பிரபலமான அரசியல் கட்சி தலைவர் பன்னீர் செல்வம்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மனைவி,பிரபல திரைப்பட இயக்குநர் அட்லி அவரது மனைவி, நயன்தாரா மற்றும் அவரின் கணவர் விக்னேஷ் சிவன், சூர்யா,ஜோதிகா உள்ளிட்டோர் திருமணத்திற்கு வருகைத்தந்து பல பார்வையாளர்களை கவர்ந்து வந்தனர்.
அம்பானி குடும்பத்தார்கள் பொதுவாக அணியும் உடையின் மதிப்பு லட்சத்திலும்,கோடியிலும் இருக்கும்,அதுமட்டுமல்லாமல் அவர்கள் போடும் ஸ்லிப்பர்,ஹேண்ட் பேக் போன்ற அனைத்துமே லட்சம்,கோடி மதிப்புடையது.
அம்பானி வீட்டின் திருமணத்திற்கு உலகெங்கிலும் இருக்கும் பணக்காரர்கள் முதல் பிரபலமான நடிகை, நடிகைகள்,பாடகி,பாடகர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு திருமணத்தை ஒரு மிகப்பெரிய திருவிழா போல் கொண்டுசேர்த்தனர்.
அம்பானி வீட்டுக் குடும்பத்தில் கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கு சமீபத்தில் ஜூலை 12 அன்று மும்பையில் ஜியோ வோல்ர்ட் அரங்கில் திருமணம் நடைப்பெற்றது.இதில் இஷா அம்பானி அணிந்திருந்த உடை அனைத்து உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தள்ளது.