அம்பானி மகளின் கண்கவர் ஆடை... மயக்கும் மருமகளின் காஸ்ட்யூம் - சபாஷ் சரியான போட்டி!
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. மும்பையில் அம்பானி குடும்பத்தாருக்கு சொந்தமான ஜியோ வோல்ர்ட் கன்வெஷன் சென்டரில் திருமண நிகழ்வு நடைபெறுகிறது.
திருமணத்தை முன்னிட்டு மாமேரு, சங்கீத், கிரஹ் சாந்தி பூஜா, ஹல்தி ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் பல பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் பங்கேற்றனர். சங்கீத் நிகழ்வில் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பரின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகை ஜான்வி கபூர், ராதிகா மெர்ச்சன்டின் மூத்த சகோதரி அஞ்சலி மெர்ச்சன்ட் ஆகியோரை மிகவும் கவனம் ஈர்த்தனர்.
தொடர்ந்து தற்போது முகேஷ் அம்பானியின் மூத்த மருமகளான ஸ்லோகா மேத்தாவும் அதிக கவனத்தை பெற்றுள்ளார்.
அந்த வகையில், நேற்று நடந்த ஹல்தி நிகழ்வில் ஸ்லோகா மேத்தா அவரது வழக்கமான உடை அலங்காரத்தை விட்டு வெளியே வந்து வித்தியாசமாக தோற்றமளித்தார்.
சிவப்பு, நீலம், பச்சை, தங்கம் மற்றும் பல ஷேடுகளை கொண்ட ஸ்கர்ட் உடன் கிளி பச்சை நிறத்தில் மிகவும் லெஹெங்கா பாவாடையை அணிந்திருந்தார். அதில் பாரம்பரிய வடிவங்களுடன் நேர்த்தியான பூ வேலைப்பாடுகள் இடம்பெற்றிருக்கிறது.
மறுபுறம், ஹல்தி நிகழ்வில் இஷா அம்பானி பிரமலும் அவரது தனித்துவமான உடையால் கவனம் ஈர்த்தார். ஹல்தி நிகழ்வில் அவர் அணிந்திருந்த உடையின் விலை 1 லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஷா அம்பானி அணிந்த அந்த ஆடை 'தில் ரங் ஜீவா லெஹெங்கா' என்றழைக்கப்படுகிறது. பல்வேறு நிறங்களை கொண்டிருக்கிறது, நிச்சயம் பார்ப்பவர்களை இது கவர்ந்திழுக்கும். தூய்மையான பட்டால் இந்த மொத்த ஆடையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. குஞ்சம் வைத்து ரம்மியான நெக்லைன் உடன் வித்தியாசமான ரவிக்கையை அவர் அணிந்திருந்தார்.