இந்திய இளம் வீரர்களின் காதலிகள் இவர்களா?
சயாலி சஞ்சீவ் - ருதுராஜ் கெய்க்வாட்; ஐபிஎல் 2021 -ல் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ருதுராஜ் கெய்க்வாட், விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவதை எதிர்நோக்கியுள்ளார். ருதுராஜ் சயாலி சஞ்சீவ் உடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஷா நேகி - ரிஷப் பந்த்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் மற்றும் அவரது காதலி இஷா நேகி பற்றி அனைவரும் அறிந்ததே. இஷா மற்றும் ரிஷப் இருவரும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிப்பவர்கள். ஈஷா தனது ஆரம்பப் படிப்பை டேராடூனில் உள்ள ஜீசஸ் கான்வென்ட் மற்றும் மேரி பள்ளியில் பயின்றார். இதற்குப் பிறகு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பட்டம் பெற்றார். ஃபேஷனில் அதிகம் ஆர்வம் உடைய அவர், தொழில்முனைவோராகவும் உள்ளார்.
பிராச்சி சிங் - பிரித்வி ஷா; 2018 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை தனது கேப்டன்சியின் கீழ் இந்தியாவுக்கு வென்று கொடுத்த பிரித்வி ஷா, நடிகை பிராச்சி சிங்குடன் டேட்டிங் செய்து வருகிறார். பிராச்சி உதான் டிவி சீரியல் மூலம் முத்திரை பதித்துள்ளார். இருப்பினும், பிருத்வியும் பிராச்சியும் தங்கள் உறவு பற்றி இதுவரை வெளிப்படையாக பேசவில்லை. பொதுவெளியிலும் ஜோடியாக செல்லவில்லை. இருவரும் சமூக ஊடகங்களில் ஒருவருக்கொருவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதியா ஷெட்டி-கேஎல் ராகுல்;
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் துணை கேப்டன் லோகேஷ் ராகுல், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியுடன் டேட்டிங் செய்து வருகிறார். சுனில் ஷெட்டியின் மகள் அதியா, இதுவரை பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலிக்கு ஜோடியாக ஹீரோ படத்தின் மூலம் தனது திரைத்துறைக்கு அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு முபாரகன் போன்ற பல படங்களில் அதியா நடித்துள்ளார்.
அதிதி ஹண்டியா-இஷான் கிஷன்: இஷான் கிஷனின் காதலி அதிதி ஹண்டியா ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர். இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் ராஜஸ்தான் போட்டியில் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றார். 2017 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா ராஜஸ்தான் பட்டத்தை வென்றார். அதே ஆண்டில், FBB கலர்ஸ் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் முதல் 15 போட்டியாளர்களில் ஒருவராக அதிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2018 -ல் மிஸ் சூப்பர்நேச்சுரல் பட்டத்தையும் வென்றார். இஷான் மற்றும் அதிதி இருவரும் நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வருகின்றனர், விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம்.
ஜெய பரத்வாஜ்-தீபக் சாஹர் : ஐபிஎல் மெகா ஏலத்தில் 14 கோடிக்கு விற்கப்பட்ட தீபக் சாஹரின் காதலி ஜெய பரத்வாஜ். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்குப் பிறகு தீபக் ஜெயாவை மைதானத்திலேயே மோதிரம் மாற்றிக் கொண்டு காதலை வெளிப்படுத்தினார். ஜெயா தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது சகோதரர் சித்தார்த் பரத்வாஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். தீபக்கும் ஜெயாவும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளலாம்.