பிரபஞ்ச அழகிப் போட்டியில் இஸ்லாமிய நாட்டின் முதல் பங்கேற்பு! சரித்திரம் படைக்கும் அழகி ரூமி அல்கஹ்தானி!

Wed, 27 Mar 2024-5:23 pm,

மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில், தான் சவுதி அரேபியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக, மாடல் அழகி ரூமி அல்கஹ்தானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Images Credit: Instagram (Rumy Alqahtani)

இதற்கு முன்னதாகவும் பல அழகுப் போட்டிகளில் கலந்துக் கொண்டு பெயர் வாங்கி செல்வாக்கு செலுத்தும் மாடல் என்று பெயர் பெற்றவர் ரூமி அல்கஹ்தானி   

Images Credit: Instagram (Rumy Alqahtani)

கடந்த ஆண்டு நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில், நிகரகுவா அழகி ஷெய்னிஸ் பலாசியோஸ், 2023ஆம் ஆண்டுக்கான பட்டம் வென்றார்.

Images Credit: Instagram (Rumy Alqahtani)

முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபியா பங்கேற்கவுள்ளது, இது இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல்முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்குக்ம் ஒரு வரலாற்று நிகழ்வாகும். 

Images Credit: Instagram (Rumy Alqahtani)

ரூமி அல்கஹ்தானி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிப் போட்டியில் கலந்துக் கொள்ளும் செய்தியை அறிவித்தார், அதோடு அவர் சில கவர்ச்சியான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

Images Credit: Instagram (Rumy Alqahtani)

"மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் பங்கேற்பதில் நான் பெருமைப்படுகிறேன். மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபியாவின் முதல் பங்கேற்பு இது" என்று ரூமி அல்கஹ்தானி இன்ஸ்டாகிராமில் அரபு மொழியில் பதிவிட்டுள்ளார்.

Images Credit: Instagram (Rumy Alqahtani)

 ரியாத்தில் பிறந்த ரூமி அல்கஹ்தானி, சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் நடந்த மிஸ் அண்ட் மிஸஸ் குளோபல் ஏஷியன் என்ற போட்டி உட்பட பல சர்வதேச அழகிப் போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ளார்.

Images Credit: Instagram (Rumy Alqahtani)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link