ITR Filing: ஜூலை 31-க்கு பின் ஐடிஆர் தாக்கல் செய்தாலும் இவர்கள் அபராதம் செலுத்த வேண்டாம்

Mon, 01 Jul 2024-12:49 pm,

ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. ஜூலை 1, 2024 இதற்கான கடைசி தேதி. வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் அனைவரும் இதை கண்டிப்பாக நினைவில் கொள்ள வேணுடும். மேலும், இது தொடர்பான முக்கியமான தகவல்களையும், புதுப்பித்தல்களையும் அறிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும்.

ஜூலை 31, 2024க்குள் 2023-24 நிதியாண்டு (2024-25 மதிப்பீட்டு) ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது அவசியமாகும். இதற்குப் பிறகு, ரிட்டனைத் தாக்கல் செய்வதற்கு அபராதம் செலுத்த வேண்டும். இதற்கான அபராத தொகை என்ன? வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறிய அனைவரும் இதை செலுத்த வேண்டுமா? இது குறித்து இந்த பதிவில் காணலாம். 

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை தவறவிட்ட அனைவரும் அபராதம் செலுத்த வேண்டியதில்லை. வருமான வரிச் சட்டத்தின்படி, யார் அபராதம் செலுத்த வேண்டும்? யார் செலுத்த வேண்டாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. இது தவிர, எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பதும் சட்டப்படி முடிவு செய்யப்படுகிறது.

காலக்கெடுவுக்குப் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்தாலும் சிலர் எந்த வித அபராதத்தையும் செலுத்த வேண்டியதில்லை. யார் அவர்கள்? இந்த தகவலை இங்கே காணலாம். 

ஒரு நபருக்கு எந்த வரிப் பொறுப்பும் இல்லை என்றால், காலக்கெடுவுக்குப் பிறகு ரிட்டன் தாக்கல் செய்தாலும் அவர் எந்த அபராதமும் செலுத்த வேண்டியதில்லை. 

பழைய வரி விதிப்பின்படி, ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் வரை இருந்தால், அந்த நபர்களும் எந்த வித அபராதத்தையும் செலுத்த வேண்டாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இந்த வரம்பு ரூ.3 லட்சமாகும். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உள்ளது.

புதிய வரி முறையில் இதில் மாற்றம் உள்ளது. புதிய வரி விதிப்பின்படி, 3 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு வரி விலக்கின் பலன் கிடைக்கும். இன்னும் பல அம்சங்களிலும் புதிய வரி முறை மற்றும் பழைய வரி முறையில் மாற்றங்கள் உள்ளன.

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் கடைசித் தேதிக்குப் பிறகு ஒருவர் வருமானத்தை தாக்கல் செய்தால், அது தாமதமான ஐடிஆர் தாக்கல் (Belated ITR Filing) என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் வரி செலுத்துவோர் ரூ.5000 அபராதம் செலுத்த வேண்டும். அதேசமயம், உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், நீங்கள் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும்.

ஐடிஆர் தாக்கல் செய்யும் முன் சம்பள சீட்டு, வீட்டு வாடகை ஒப்பந்தம், HRA கிளைம்களின் ரசீதுகள், முந்தைய வரி கணக்கு நகல்,  Form 16, வங்கி அறிக்கைகள், TDS ஆகியவற்றை சரியாக வைத்துக்கொள்வது நல்லது. இது வேகமாகவும், சரியாகவும் ஐடிஆர் -ஐத் தாக்கல் செய்ய உதவும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link