Rajinikanth in Rishikesh: ரஜினிகாந்தின் ரிஷிகேஷ் பயண புகைப்படங்கள்!
ரஜினிகாந்தின் ஆன்மீக பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.
நேற்று வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இப்படம் மூலம் ரஜினி மாஸ் கம்-பேக் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
ரஜினிகாந்த் ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்னரே தனது ஆன்மீக பயணத்தை தொடங்கி விட்டார்.
ரஜினிகாந்த் தற்போது ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் இருக்கிறார்.
இங்கு அவர் தனது நண்பர்களுடன் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.