ஜாலியன் வாலாபாக் படுகொலை: 10 நிமிடங்களில் பறந்த 1650 தோட்டக்கள்

Wed, 13 Apr 2022-1:54 pm,

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி, பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜாலியன் வாலாபாக் என்ற பூங்காவில், ஆங்கிலேயர்களின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தன்னை காத்துக் கொள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளுடன்  கிணற்றில் குதித்தனர். பூங்காவில் வெளியேறும் பாதை மிகவும் குறுகியதாக இருந்ததன் காரணமாக நெரிசலில் பலர் சிக்கி இறந்தனர். அதோடு ஆயிரக்கணக்கான மக்கள் துப்பாக்கி தோட்டாக்களால் இறந்தனர். இந்த சம்பவம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றியது.

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி, அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக் கொள்கை மற்றும் ரவுலட் சட்டம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எதிராக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.  அப்போது,  ஊரடங்கு உத்தரவு அமலையும் மீறி ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள ஜாலியன்வாலாபாக் சென்றடைந்தனர். கூட்டத்தைக் கண்டு திகைத்துப் போன ஆங்கிலேய அரசு இந்தியர்களின் குரலை ஒடுக்க இந்த கொடுமையை நிகழ்த்தியது.

கூட்டத்தின் போது தலைவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ​​பிரிகேடியர் ஜெனரல் ரெஜினோல்ட் டயர், ராணுவ வீரர்களுடன் ஜாலியன் வாலாபாக் சென்று துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். 90 பிரிட்டிஷ் வீரர்கள் முன்னறிவிப்பின்றி ஆயிரக்கணக்கான மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஜாலியன் வாலாபாக்கில் ஆங்கிலேயர்கள் 10 நிமிடங்களில் மொத்தம் 1650 தோட்ட்டக்கள் பறந்தன. இதன் போது, ​​ஜாலியன் வாலாபாக்கில் இருந்த மக்கள் வெளியே வரமுடியவில்லை, ஏனெனில் பூங்காவில் இருந்து வெளியேற ஒரே ஒரு வழி மட்டுமே இருந்தது. அங்கு ஆங்கிலேயர்கள் நின்று கொண்டிருந்தனர். துப்பாக்கிச் சூட்டைத் தவிர்க்க மக்கள் கிணற்றில் குதித்தனர். இச்சம்பவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உடல் நசுங்கி பலியாகினர்.

ஆங்கிலேயர்களின் தோட்டாக்களைத் தவிர்க்க, மக்கள் ஜாலியன் வாலாபாக்கில் அமைந்துள்ள கிணற்றில் குதித்தனர், ஆனால் இதற்குப் பிறகும் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றவில்லை. கிணறு சடலங்களால்   நிரம்பியது.

ஜாலியன் வாலாபாக்கில் வீரமரணம் அடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. துணை கமிஷனர் அலுவலகத்தில் 484 தியாகிகளின் பட்டியல் உள்ளது, ஜாலியன்வாலாபாக்கில் 388 தியாகிகளின் பட்டியல் உள்ளது. அதே நேரத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆவணங்களில், 379 பேர் இறந்ததாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link