வீண் செலவுகளை குறைக்க ஜப்பானியர்கள் செய்யும் ஒரே விஷயம்! என்ன தெரியுமா?
)
ஜப்பான் மொழியில் Kakeibo என இதனை குறிப்பிடுகின்றனர். இந்த தத்துவத்தின் படி, எப்படி செலவு செய்ய வேண்டும் எப்படி சேமிக்க வேண்டும் என ஜப்பானியர்கள் வாழ்ந்து வருகின்றனர். சுருக்கமாக சொன்னால், நம் பணம் எங்கு, எப்படி செலவாகிறது என்பது பற்றி நாம் அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.
)
நீங்கள் செய்யும் செலவுகளையும் உங்களுக்கு வரும் வரவுகளையும் ஒரு பேனா, பேப்பர் எடுத்து அதில் எழுத வேண்டும். பழைய முறையாக இருந்தாலும், வீண் செலவை குறைக்க ஜப்பானியர்களுக்கு இதுதான் ஏதுவான முறையாக உள்ளதாம்.
)
உங்கள் செலவை நான்காக பிரிக்க வேண்டும். அடிப்படை தேவைகள், இதர செலவுகள், பொழுது போக்கு செலவுகள், எதிர்பாராத செலவுகள் என இவற்றை பிரிக்க வேண்டும்.
உங்களிடம் எவ்வளவு உள்ளது, அதனை எப்படி சேமிக்க விரும்புகிறீர்கள், எவ்வளவு செலவு செய்கிறீர்கள், அடுத்த மாதம் இந்த செலவுகளை குறைப்பது எப்படி? போன்ற கேள்விகளை நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ள வேண்டும்.
எதையேனும் வாங்குவதற்கு முன்னர், என்னால் அதை வாங்க முடியுமா? அது எனக்கு தேவையானது தானா? அது என்னை நீண்ட காலத்திற்கு மகிழ்ச்சி படுத்துமா? போன்ற கேள்விகளை உங்களிடமே நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
இந்த முறையால், நீங்கள் உங்கள் நிதி நிலையை அதிகரித்துக்கொள்வதோடு நீங்கள் சுய ஒழுக்கத்துடன் இருக்கலாம்.
இப்படி சுய ஒழுக்கத்துடன் வாழ்வது உங்களின் நிதி நிலையை உயர்த்தும். நிதி ரீதியாக சுதந்திரமாகவும் இருக்கலாம்.