பும்ரா காயம்! அவருக்கு பதில் இந்திய அணியில் இணையப்போகும் 3 வீரர்கள்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் 2025 தொடர் பிப்ரவரி 19ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிராக விளையாடுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது அணிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்குள் காயம் சரியாகவில்லை என்றால் அவருக்கு பதில் இடம் பெரும் வீரர்களை பற்றி பார்ப்போம்.
இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஹர்ஷித் ராணா இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். இருப்பினும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவரை 14 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பிரசித் கிருஷ்ணா இந்தியாவுக்காக 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 29 விக்கெட் எடுத்துள்ளார். கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் இடம்பெற்று இருந்தார்.
அவேஷ் கான் இதுவரை 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சமீபத்திய டி20 அணியிலும் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்.
இவர்களை தவிர முகேஷ் குமார், கலீல் அகமது மற்றும் யாஷ் தயாள் ஆகியோரும் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும் கடைசி நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படும்.