ஜவான் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி இதுதான்!

Tue, 26 Sep 2023-9:05 am,

ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு ஷாருக்கானின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாகும். ஜவான் படம் ஓடிடியில் இந்தி, ஆங்கிலம் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. 

 

ஜவான் திரைப்படம் 2023 அக்டோபரில் Netflix வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. 

 

உலகம் முழுவதும் ரூ 1000 கோடி வசூல் செய்துள்ளது. ஜவான் OTT வெளியீட்டு தேதி எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.  நவம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அட்லீ  இயக்கிய இந்த படத்தை கவுரி கான் மற்றும் கௌரவ் வர்மா தயாரித்துள்ளனர், மேலும் அட்லீயின் முதல் இந்தி படம் ஜவான் ஆகும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதும், அவர்களின் உரிமைகளுக்காகப் போராடக் கற்றுக் கொடுப்பதும் பற்றி இந்த படம் பேசுகிறது.  

 

இது முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது.  படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் ஜனவரி 2023ல் தொடங்கி, சிஜி வேலைகள் முடிய ஆறு மாதங்கள் ஆனது. 

 

Amazon Prime, Hotstar, Netflix என ஒவ்வொரு OTT இயங்குதளமும் திரைப்படத்தை வாங்க போட்டி போட்ட நிலையில், நெட்ஃபிக்ஸ் இந்த படத்தை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சுமார் 300-400 கோடி ரூபாய் வரையில் விற்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link