காதலிக்க நேரமில்லை: படம் திரையரங்கில் வெளியான சில நாட்களிலே ஓடிடி ரிலிஸ் தேதி வெளியீடு!
)
ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் காதலிக்க நேரமில்லை.
)
ஷ்ரியா என்ற கதாபாத்திரத்தில் நித்யா மேனன், சித்தார்த் என்ற கதாபாத்திரத்தில் ரவி மோகனம் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். மொத்த படத்தையும் இவர்கள் இருவரது பெர்பார்மன்ஸ் தான் தாங்கி பிடிக்கிறது. இவர்கள் இருவரில் நித்யா மேனன் இன்னும் சிறப்பாக நடித்துள்ளார்.
)
இந்த படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, வினய் ராய், டிஜே பானு, ஜான் கொக்கன், லால், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி, ரோகன் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, கேவெமிக் ஆரி ஒளிப்பதிவு மற்றும் லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
ஏ ஆர் ரகுமானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காதலிக்க நேரமில்லை படத்திற்கு ஒரு பக்க பலமாக அமைந்துள்ளது.
படம் முழுக்கவே காதலை வைத்து நகர்த்திக் கொண்டு சென்றாலும் பெரிதாக எங்கும் போர் அடிக்கவில்லை.
காதலிக்க நேரமில்லை: ரசிகர்களிடையே பெரிதான வரவேற்பை இப்படம் பெற்றுத்தரவில்லை. மேலும் இதன் வசூல் எதிர்பார்ப்பைவிடக் குறைவாகவே பெற்றுத் தந்தது.
ஓடிடி: இப்படத்தின் விமர்சனங்கள் முதல் பாக்ஸ் ஆபிஸ் வரை அனைத்தும் எதிர்மறையான தோல்வியிலே சென்றது. இப்படத்தின் மூலம் ரவி மோகனுக்குக் கிடைத்த இன்னொரு தோல்வி படம் என்றே சொல்லலாம்.
காதலிக்க நேரமில்லை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம் தேதி அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.