700 ரூபாய்க்கு எக்கச்சக்க டேட்டா... ஜியோவின் பம்பர் ப்ரீபெய்ட் பிளான்!
)
ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்கு பல்வேறு விதமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பல பிளான்களில் தினந்தோறும் அளிக்கப்படும் டேட்டாக்களுடன் கூடுதல் டேட்டா பலன்களையும் வழங்குகிறது.
)
அந்த வகையில், இங்கு நாம் காண உள்ள ஜியோவின் ரீசார்ஜ் திட்டத்திலும் தினந்தோறும் அளிக்கப்படும் டேட்டாக்களுடன் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால் அந்த திட்டத்திற்கு ஆயிரக்கணக்கில் நீங்கள் செலவிட வேண்டாம், அந்த திட்டம் 700 ரூபாய்க்கும் குறைவானதுதான்.
)
முன்பு குறிபிட்ட அந்த திட்டம் ஜியோவின் ரூ.699 ப்ரீபெய்ட் பிளான்தான். ஆனால், இந்த பிளானில் வேலிடிட்டி 28 நாள்களாகும். வேலிடிட்டி குறைவாக இருந்தாலும் இந்த பிளானில் நன்மைகள் ஏராளம். அதனை இதில் காணலாம்.
இந்த பிளானில் பயனர்கள் தினமும் 1ஜிபி, 2ஜிபி இல்லை, 5ஜிபி டேட்டாவை பெறுகின்றனர். 28 நாள்கள் வேலிடிட்டியில் நீங்கள் மொத்தம் 140ஜிபி டேட்டாவை பெறுவீர்கள்.
தினமும் 5ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 16ஜிபி டேட்டாவும் வழங்கப்படும். ஒருநாளுக்கான 5ஜிபி டேட்டா முடிந்த உடன் இந்த 16ஜிபி டேட்டா கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
16ஜிபி டேட்டாவும், அன்றைய நாளுக்கான 5ஜிபி டேட்டாவும் முடிந்துவிட்டால் இணைய வேகம் @64kbps ஆக குறைந்துவிடும். இதன்மூலம், தினமும் 5ஜிபி மற்றும் கூடுதல் 16ஜிபி என மொத்தம் 156ஜிபி டேட்டாக்கள் வழங்கப்படுகிறது.
டேட்டா மட்டுமின்றி வரம்பற்ற காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ஜியோ ஆப்களுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது.