ஜியோ பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பல ஆபர்களை வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டம்!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய 5ஜி ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூபாய் 601க்கு ரீசார்ஜ் செய்து, பயனர்கள் வரம்பற்ற அதிவேக டேட்டாவை அனுபவிக்க முடியும்.
ரூ. 601 திட்டத்தில் 12 தனிப்பட்ட டேட்டா வவுச்சர்களை ஜியோ வழங்குகிறது. ஒவ்வொரு வவுச்சரும் ரூ. 51 விலையில் ஒரு மாதத்திற்கு வரம்பற்ற 5G டேட்டாவை வழங்குகிறது. இந்த வவுச்சர் மூலம் தினசரி 1.5 அல்லது 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களுடன் இணைத்து கொள்ளலாம்.
இந்த புதிய வவுச்சரை MyJio ஆப் அல்லது ஜியோ இணையதளம் மூலம் பெற்று கொள்ளலாம். வரம்பற்ற 5G டேட்டாவை பெற வாடிக்கையாளர்கள் இந்த வவுச்சர்களை மாதந்தோறும் ரிடீம் செய்ய வேண்டும்.
ரூ. 601 திட்டம் மட்டுமில்லாமல், ஜியோ ரூ. 51, ரூ. 101 மற்றும் ரூ. 151 விலையில் மூன்று தனித்தனி 5G டேட்டா வவுச்சர்களை பயனர்களுக்கு வழங்குகிறது. ஒவ்வொன்றும் தனி தனி டேட்டா தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜியோ, ஏர்டெல் போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதம் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தின. இதனால் 5G டேட்டா பேக் விலை ரூ. 329க்கு விலை உயர்த்தப்பட்டது.
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ. 601 ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை குறைந்த செலவில் அனுபவிக்க முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் திட்டங்களை மாற்றாமல் அதிவேக டேட்டாவை அனுபவிக்க முடியும்.