தேவாரா படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி எப்போது? வெளியானது அறிவிப்பு!
நவம்பர் 8 ஆம் தேதி தேவாரா பகுதி 1 பிரபலமான Netflix இல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு ஓடிடித் தளத்தில் வெளியாகும் என்றுக் கூறுகின்றனர்.
தேவாரா பகுதி 1 செப்டம்பர் 27 அன்று வெளியானது. இது குறிப்பிட்ட பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் பெற்றது எனக் கூறப்படுகிறது.
ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான தேவரா திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகியப் பல பிராந்திய மொழிகளில் வெளியானது
தேவராப் படத்தில் சுட்டமல்லி பாடல் வெளியான சில நிமிடங்களிலே சமூக வலைத்தளத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இப்படம் ஆக்ஷன் கலந்த அதிரடி ஹிட் திரைப்படம்.
சமீபத்தில் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் ஜான்வி கபூர் ரசிகர்கள் முதல் ஷோ பார்பதற்கு திரையரங்களில் அலைமோதினர். தேவரா படத்திற்கு ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு முன்பாகவே திரையரங்கில் இடம் பிடித்தனர்.
தேவரா படம் தெலுங்கில் அதிக வசூல் செய்துள்ளது . அந்த வகையில் ’தேவாரா’ வெளியான ஒரு வாரத்திற்கு பிறகு வசூல் பெரிதாக வரவில்லை என்றாலும் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ரூ. 209 கோடி வசூல் செய்துள்ளது எனக் கூறுகின்றனர்.
தேவாரா படத்தின் வசூல் இந்தியாவில் சுமார் ரூ. 280 கோடி வசூலித்துள்ளது. இப்படம் உலகளவில் ரூ. 509 கோடி வசூல் பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது.
ஜூனியர் என்டிஆர் தேவாராப் படத்தில் ஒரு கடலோர கிரமா தலைவனாக சிறப்பான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது கதாப்பாத்திரத்தின் முக்கிய நோக்கம் தன்னுடைய தந்தை வேலையை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக செய்து வருகிறார்.