ரிஷபத்தில் குரு வக்ரமானால் பாவம் மோசமான காலத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்! இவர் வக்ர குரு!
ரிஷபத்தில் தற்போது சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு பகவான் அக்டோபர் 9ம் தேதி முதல் பின்நோக்கி நகர்கிறார். இந்த காலகட்டத்தில் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம், துரதிருஷ்டமாக மாறும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு பகவான் ரிஷபத்தில் வக்ர பெயர்ச்சியடைகிறார். இது சில ராசிகளுக்கு மிகவும் மோசமான காலமாக இருக்கும்
கன்னி ராசிக்கு குருவின் பெயர்ச்சியால் ஏற்பட்ட நன்மைகள், தற்போது எதிராக மாறும். நண்பர்களும் பகைவராகும் நேரம் இது என்பதால் கவனமாக இருக்கவும்
சனியின் பெயர்ச்சியால் ஏற்கனவே வாடி வதங்கியிருக்கும் தனுசுவுக்கு வக்ர குருவும் பாதகத்தையே செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்
மீன ராசியினருக்கு குரு பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும் காலம் இது. இருந்தாலும், செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை சுபசெலவாக மாற்றினால் மனதில் பாரம் இருக்காது
குரு பெயர்ச்சியால் நல்ல பலன்களையே அனுபவித்து வந்த துலாம் ராசிக்காரர்களுக்கு, குருவின் வக்ரகதி இயக்கம் சற்று மோசமானதாகவே இருக்கும். மனக்கவலைகள் அதிகரிக்கும்
ரிஷபத்தில் வக்ர கதியில் இயங்கும் குருவின் தாக்கம் மிதுன ராசியினருக்கு பாதகமாகவே இருக்கும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது