கலைஞர் கனவு இல்லம் திட்டம் இவர்களுக்கு கிடைக்காது..!

Sat, 23 Nov 2024-11:53 am,

தமிழ்நாடு அரசு கலைஞர் கனவு இல்ல திட்டத்துக்கு (Kalaignar Kanavu Illam Scheme 2024) நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வீடு இல்லாதவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு, அரசே வீடு கட்ட ஆகும் தொகையில் குறிப்பிட்ட தொகையை கொடுக்கும். 

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 1975 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைத்த இந்த திட்டம், கலைஞர் கருணாநிதி வீடு வழங்கும் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. சுமார் 8 லட்சம் குடும்பங்கள் தங்களின் சொந்த நிலத்தில் குடிசையில் வாழ்வதாக அரசு கணக்கெடுத்து வைத்திருக்கிறது.

அவர்களுக்கு எல்லோருக்கும் 2030 ஆண்டுக்குள் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 3500 கோடி ரூபாய் செலவில் 1 லட்சம் கான்கிரீன்ட் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. இதற்கான நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு வீட்டிற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அரசு கொடுக்கும். 

இந்த பணம் மொத்தம் 4 பிரிவுகளாக பயனாளிகளின் வங்கி கணக்குக்கே நேரடியாக அரசு அனுப்பி வைக்கும். சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட தகுதியானவர்கள். 

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கு குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் நிலம் இருக்க வேண்டும். அதில் 300 சதுர அடி கான்கீரிட் கட்டிடம் கட்ட வேண்டும். புதிதாக கட்டப்படும் வீடுகள் அனைத்தும் சிமெண்ட் மூலம் மட்டுமே கட்ட வேண்டும். 

இந்த வீட்டின் சுவர் மண்சுவர் மற்றும் மண் சாந்து மூலம் கட்டப்படக்கூடாது. புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டிருப்பவர்கள் இதில் வீடு கட்ட முடியாது. சொந்தமாக கான்கிரீட் வீடு இருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாது.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெற குடிசை வீடுகளில் வாழ்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் ரூ.3.5 லட்சம் பணம் வீடு கட்ட கிடைக்கும். 

குடிசையில் ஒருபகுதி கான்கீரிட், ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட்டு இருந்தாலும் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் படி வீடு கட்ட கட்டுமான பொருட்களுக்கான சிமெண்ட் மற்றும் கம்பி வழங்கப்படும். ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை நிதியாகவும், மீதம் 40 ஆயிரத்திற்கு கட்டுமான பொருட்களாகவும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link