சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா?

Wed, 23 Oct 2024-12:50 pm,

கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நடிகர் ஸ்ரீ ராமச்சந்திரனை இரண்டாம் தாரமாகத் திருமணம்  செய்துகொண்டார் எனும் வதந்தி வெகுவாக மக்களிடம் தீப்போல் பரவி வந்தது. இந்த வதந்தியை  நம்பிய ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கல்யாணி பிரியதர்ஷன் மலையாளப் பெண்ணாக இருந்தாலும் இவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது தெலுங்கு படத்தில்தான். தென்னிந்திய படமான தெலுங்கு, தமிழில் வெற்றிபெற்றப் பிறகே இவருக்கு மலையாளப் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

கல்யாணி பிரியதர்ஷன் தெலுங்கு படம் ஒன்று ‘ ஹெலோ’ இப்படத்தில் முதன்முதலில் அறிமுகமானர். கல்யாணிக்கு இந்த படம் எதிர்பார்பைவிட வெற்றிப்பெற்றது.இதனால் கல்யாணி தென்னிந்திய படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி விளம்பரம் போன்றவற்றில் நடிக்க தொடங்கினார்.

 

கல்யாணி சிவகார்திகேயனுடன்  ‘ஹீரோ’ படத்தில்  நடித்து பிரபலமானர். இப்படம் கல்யாணி பிரியதர்ஷனுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக கிடைத்துள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் அதிக ஆர்வம் காட்டிவந்தார். இந்த வகையில் சிம்பு படத்திற்கு ’மாநாடு’ ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

 

கல்யாணி பிரியதர்ஷன் இவரின் தந்தை இயக்குநர் பிரியதர்ஷன் இவர் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்பட இயக்குநர் மற்றும் மிகப்பெரிய எழுத்தாளர். கல்யாணியின் தாய் லிசி மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய படத்தின் நடிகை என்பது பலருக்கும் தெரியும். கல்யாணி முதலில் உதவியாளராக பல படங்களில்  வேலைப்பார்த்து வந்தார்.

கல்யாணி பிரியதர்ஷன் நகைக் கடை ஒன்று 'யெஸ் பாரத் வெட்டிங் கலெக்ஷன்ஸ்'  இதில்  நகை விளம்பரத்திற்காக இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது தெரியவந்தது. 

கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நடிகர் ஸ்ரீ ராமச்சந்திரன் இவர்கள் இருவரின் புகைப்படத்தைப் பார்த்ததும் திடீரென கல்யாணி சொல்லிக்கொள்ளமால் சஸ்பென்ஸாக திருமணம் செய்துக் கொண்டார் என்று ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கல்யாணி பிரியதர்ஷன் இவரின் திறமையை சினிமாவில் அதிகம் காட்ட ஆரம்பித்தார். பல மொழிகளின் தொலைக்காட்சி விளம்பரங்களில் இவர் நடித்து பிரபலமானர்.

கல்யாணி பிரியதர்ஷன் மற்றும்  நடிகர் ஸ்ரீ ராமச்சந்திரன் இருவரது திருமணம் நிஜம் அல்ல, இது வெறும் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது. இந்த வதந்தி பரவி சில நேரங்களுக்கு பிறகே ரசிகர்களுக்கு உண்மையான திருமணம் இல்லை என்றுத் தெரியவந்தது. இந்த உண்மையை அறிந்த ரசிகர்கள் பெருமூச்சு விட்டு சலசலப்பை நிறுத்தினர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link