கர்நாடகா தேர்தல் 2018: தொடங்கியது வாக்குபதிவு - படங்களை பார்க்க
மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு 222 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்கு பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள இரண்டு தொகுதிக்கும் வரும் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று 7 மணி அளவில் தொடங்க மாலை 6 மணிவரை நடைபெறும்.
பொது மக்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் என கர்நாடகா சட்டசபைக்கான தேர்தலில் வாக்களித்து வருகின்றனர்.
வாக்களிக்க வரும் வாக்காளர்களின் விவரங்களை சரிபார்க்கும் அதிகாரிகள்.
புட்டூரில் வாக்கு சாவடி 123A-ல் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வரிசையாக நின்று செலுத்து வருகின்றனர்.
இன்று தேர்தல் நடைபெறுவதால் கடவுளிடம் ஆசீர்வாதம் கேட்ட பாஜக முதல் அமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா
பாஜக முதல் அமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா வாக்களித்தார் #KarnatakaElection2018
பாஜக முதல் அமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா வாக்களித்தார் #KarnatakaElection2018
மத்திய அமைச்சர் மற்றும் பா.ஜ.க தலைவர் சதானந்த கவுடா புட்டூரில் வாக்களிக்கிறார்.
ஆர்வத்துடன் வாக்களித்து வரும் பொதுமக்கள். நீங்கள் பார்க்கும் காட்சி டோம்சாண்ட்ரா மூனிரைடி பள்ளி வாக்கு சாவடி