“தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்” தமிழ் சினிமாவின் கார்த்திகை தீப பாடல்கள்!

Sun, 26 Nov 2023-1:10 pm,

கார்த்திகை தீப திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவில் இந்த நாளை கொண்டாடும் வகையில் பல பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை என்னென்ன பாடல்கள்? இங்கு பார்ப்போம் வாங்க. 

“மலை கோவில் வாசலில்..” பாடல் வீரா படத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த படத்தில் ரஜினி ஹீரோவாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக மீனா மற்றும் ரோஜா ஆகியோர் நடித்திருப்பர். இப்பாடல் முழுவதும் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டிருக்கும். 

“நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பார்க்குது..” பாடல் ஒளிக்காத இல்லங்களே இருக்காது. சூர்யவம்சம் படத்தில் இடம் பெற்றிருந்த இந்த பாடலில் கடைசியில் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து நடனமாடுவர். இதில் சரத்குமார், தேவையானி, ராதிகா உள்ளிட்டோர் நடித்திருப்பர். 

தேவராகம் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல், “அழகிய கார்த்திகை தீபங்கள் ஆடும்..” இதில், ஸ்ரீதேவி, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த பாடலுக்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார். 

1997ஆம் ஆண்டு வெளியான “தேவதை” படத்தில் இடம் பெற்றிருந்த பாடல், “தீபங்கள் பேசும், திருக்கார்த்திகை மாதம்..” இப்பாடல் அனைத்து கார்த்திகை தீப திருநாட்களிலும் ஸ்பெஷலாக ஒலிக்கப்படும். 

ஸ்ரீகாந்த்-த்ரிஷா நடிப்பில் வெளியான படம், மனசெல்லாம். இந்த படத்தில் “கையில் தீபம் ஏந்தி வந்தோம்..” என்ற பாடலிடம் பெற்றிருக்கும். பார்ப்பவர்களின் கண்கள் குளிரும் வகையில் இப்பாடல் முழுவதும் கார்த்திகை தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். 

“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை..” பாடல், குடும்பங்கள் கொண்டாடும் பாடலாக பார்க்கப்படுகிறது. இது, வானத்தை போல படத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த படத்தில் மீனா, விஜயகாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link